ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ பிறப்பித்த அவசர ஆணையை நாடாளுமன்றம் ஏற்கக்கூடாது என வலியுறுத்தி, ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் இறங்கினர். கடந்த 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வேலை உருவாக்கச் சட்டம் பிழையானது என்று அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அச்சட்டத்திற்குப் பதிலாக சென்ற டிசம்பர் மாதம் அவசர ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் அதிபர் ஜோக்கோவி. ஆனால், அது தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் எதிரானது எனக் கூறி, தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, அதிபரின் ஆணை சட்டபூர்வமாக செல்லு படியாகுமா என இப்போதைய நாடாளுமன்ற அமர்வில் மதிப்பிடப்படும் என்று துணை நாயகர் தெரிவித்திருக்கிறார்.
இந்தோனீசியாவில் அதிபர் ஆணைக்கு எதிராக போராட்டம்
1 mins read
அதிபரின் ஆணைக்கு எதிராக இந்தோனேசிய தொழிலாளர்கள் நடத்திய போராட்டம். படம்: இபிஏ -