நேப்பாளத்தில் 72 பேர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கியது

நேப்பாளத்தில் 72 பேர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கியது

1 mins read
f594002a-2711-4205-89fb-075cc28486e2
ஏடிஆர் 72 ரக விமானம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து போக்காராவுக்கு சென்றுகொண்டிருந்தபோது கஷ்கி எனும் வட்டாரத்தில் நொறுங்கியது. (படம்: PARAS156/டுவிட்டர்) -

நேப்பாளத்தில் 72 பேர் பயணம் செய்துகொண்டிருந்த யெட்டி விமானம் விபத்துக்குள்ளானது. விபத்தில் குறைந்தது 44 பேர் மாண்டனர்.

மீட்புப் பணி நடந்து வருகிறது.

விமானத்தில் 68 பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏடிஆர் 72 ரக விமானம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து போக்காராவுக்கு சென்றுகொண்டிருந்தபோது போக்காரா நகரில் கஷ்கி எனும் வட்டாரத்தில் நொறுங்கியது.

சம்பவ இடத்திலிருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் சமூகத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.