அமெரிக்காவில் நடந்த ஜாக்பாட் குலுக்கில் 1.35 பில்லியன் டாலரை வென்றுள்ளார் அதிர்ஷ்டசாலி ஒருவர். மெய்ன மாநிலத்தை சேர்ந்த அந்த நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க அதிர்ஷ்ட குலுக்கலில் வரலாற்றில் 1.35 பில்லியன் டாலர் பரிசு தொகை நான்காவது பெரிய பரிசு தொகையாகும்.
'மெகா மில்லியன்ஸ்' எனும் அந்த குலுக்கலில் 30, 43, 45, 46, 61 மற்றும் 14 ஆகிய எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. குலுக்கல் வென்றவருக்கு அனைத்து ஆறு எண்களும் இருந்ததாகக் கூறப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக நடந்துவரும் குழுக்கில் வெற்றியாளர் இல்லை.
அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 'மெகா மில்லியன்ஸ்' குலுக்கல் இடம்பெறுகிறது.

