கலிஃபோர்னியாவில் அவசரநிலை அறிவிப்பு

2 mins read
a526d28d-293d-4953-a637-8b587d4eb2b7
நேற்று முன்­தி­னம் கலி­ஃபோர்­னி­யா­வில் நிலைமை மோச­ம­டைந்­தது. கன­ம­ழை­யு­டன், கடு­மை­யான பனிப்­பொ­ழி­வும் பலத்த காற்­றும் அம்­மா­நி­லத்­தைப் புரட்­டிப் போட்­டது. படம்: ஏஎஃப்பி -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா மாநி­லத்­தில் அவ­சரநி­லையை அந்­நாட்டு அதி­பர் ஜோ பைடன் அறி­வித்­துள்­ளார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி­யி­லி­ருந்து அந்த மாநி­லத்தைக் கன­மழை, வெள்­ளம், நிலச்­ச­ரி­வு­கள், மின்­தடை ஆகி­யவை உலுக்கி வரு­கின்­றன.

இத­னால் கலி­ஃபோர்­னியா மக்­கள் பலர் தங்­கள் வீடு­க­ளி­

லி­ருந்து வெளி­யே­றும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இயற்கை பேரி­டர் கார­ண­மாக இது­வரை குறைந்­தது 19 பேர் மாண்­டு­விட்­ட­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அரசு நிதி உதவி வழங்­கப்­ப­ட­லாம் என்று வெள்ளை மாளிகை கூறி­யது.

நேற்று முன்­தி­னம் கலி­ஃபோர்­னி­யா­வில் நிலைமை மோச­ம­டைந்­தது. கன­ம­ழை­யு­டன், கடு­மை­யான பனிப்­பொ­ழி­வும் பலத்த காற்­றும் அம்­மா­நி­லத்­தைப் புரட்­டிப் போட்­டது.

இந்­நி­லை­யில், அடுத்த வாரத்­தில் நிலைமை சற்று மேம்­ப­ட­லாம் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் தற்­போது 24,000க்கும் மேற்­பட்­டோர் மின்­சா­ரம் இன்றி தவிப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

கலி­ஃபோர்­னியா முழு­வதிலும் வெள்ள அபா­யம் இருப்­ப­தா­க அஞ்­சப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து விழிப்­பு­டன் இருக்­கு­மாறு அம்­மா­நில மக்­களை அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­ட­னர். அத்­து­டன் பாதிப்படையக்­கூ­டிய இடங்­களில் வசிப்­போர் உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

சேன்டா குரூஸ் கவுண்டி ஒரே வாரத்­தில் இரு­முறை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டில் அங்கு மூன்று முறை வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது.

அங்கு வெள்­ளம் சற்று வடிந்த பிறகு குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஒன்­றி­ணைந்து தங்­கள் குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளைச் சுத்­தம் செய்­த­னர்.

இதே நிலை தங்­க­ளுக்­குத் தொடர்ந்து ஏற்­பட்டு வரு­வ­தால் விரக்தி அடைந்­தி­ருப்­ப­தாகக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் குறை­கூ­றி­னர்.

"கடந்த இரண்டு ஆண்­டு­களில் கலி­ஃபோர்­னி­யா­வில் ஏற்­பட்ட காட்­டுத் தீயில் மாண்­டோ­ரின் எண்­ணிக்­கை­யை­விட கன­மழை, வெள்­ளம், நிலச்­ச­ரிவு ஆகி­யவை கார­ண­மாக உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை அதி­கம்," என்று கலி­ஃபோர்­னியா ஆளு­நர் கெவின் நியூ­சம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

சியேரா நிவே­டா­வில் மிகக் கடு­மை­யான பனிப்­பொ­ழிவு ஏற்­பட்­டுள்­ளது. பனிப்­பொ­ழி­வு­டன் பலத்த காற்று வீசி­யதை அடுத்து, அங்­குள்ள பல சாலை­கள் மூடப்­பட்­டுள்­ளன.

கலிஃபோர்னியாவில் உயிர்ச் சேதம் ஏற்படாதிருக்க மீட்புப் பணியாளர்களும் அதிகாரிகளும் விழிப்புநிலையில் இருப்பதாகவும் நிலைமை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளம் காரணமாகப் பல வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.