மணிலா: பிலிப்பீன்ஸில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் காரணமாக குறைந்தது 27 பேர் மாண்டுவிட்டனர். இந்நிலையில், கனமழை தொடரும் என்று அந்நாட்டின் வானியல் மையம் முன்னுரைத்துள்ளது.
கிறிஸ்துமஸ் வாரயிறுதி
யிலிருந்து பிலிப்பீன்ஸின் தெற்கு, மத்திய தீவுகளில் கனமழை காணமாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதன் விளைவாக ஆயிரக்
கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்தது 11 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் மூவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை, வெள்ளம் காரணமாகச் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி 83,000க்கும் மேற்பட்டோர் துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக பிலிப்பீன்ஸ் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து, கொட்டும் மழையில் சிறு குழந்தைகளைப் பத்திரமாக வெளியேற்றிய மீட்புப் பணியாளர்கள்.
படம்: ராய்ட்டர்ஸ்

