கோலாலம்பூர்: அம்னோ கட்சித் தேர்தலின்போது தலைவர், துணைத் தலைவர் பதவி
களுக்குத் தேர்தல் நடத்தப்
படாது என்று அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 5,000க்கும் மேற்பட்ட அம்னோ பிரமுகர்களில் பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அம்னோ கட்சித் தேர்தல் வரும் மே மாதம் 19ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் விளைவாக கட்சித் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடியையும் துணைத் தலைவர் முகம்மது ஹசானையும் யாரும் எதிர்த்துப் போட்டியிட முடியாது. பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
இறுதியானது என்று திரு ஸாஹிட் தெரிவித்தார்.
இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு அம்னோவின் கட்சி விதிமுறைகளுக்கு விரோதமானதாக இருக்கக்
கூடும் என்று அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

