இந்தோனீசியாவில் நிலநடுக்கம்

இந்தோனீசியாவில் நிலநடுக்கம்

1 mins read
c446114f-0567-4ce9-8868-9db85d3eef67
5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதும் ஏற்படவில்லை என்று இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர். படம்: பிக்ஸாபே -

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதும் ஏற்படவில்லை என்று இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர்.

பொகோர் நகருக்கு வடமேற்கில், 25 கிலோமீட்டர் தூரத்தில், கடல்படுகைக்கு 132 கிலோமீட்டர் அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனீசியாவின் வானிலை, புவியியல் ஆணையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை.