லண்டன்: உலகளவிலான வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் பாதியாகக் குறையும் சாத்தியம் இருப்பதாக அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.
உக்ரேன் போர், அதிகரித்து வரும் பணவீக்கம், இறுக்கமாகி வரும் நாணயக் கொள்கை போன்றவற்றால் வேலைவாய்ப்பு விகிதம் நடப்பாண்டில் 1 விழுக்காட்டுக்குக் குறையும் என்று தான் எதிர்பார்ப்பதாக அந்த அமைப்பு நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு விகிதம் 2 விழுக்காடாக இருந்தது.
வேலைவாய்ப்பு விகிதம் சுருங்குவதன் காரணமாக வேலையில்லாதோர் எண்ணிக்கை இந்த ஆண்டு மூன்று மில்லியன் அதிகரித்து 208 மில்லியனைத் தொடும் என்றும் அது தெரிவித்தது.
வேலை செய்வோர் ஈட்டும் ஊதியத்தில் பெரும்பாலான பகுதியை பணவீக்கம் விழுங்கும் சாத்தியம் இருப்பதாகவும் ஐஎல்ஓ தனது உலக நிலவர அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
பெரும்பாலான நாடுகள் கொள்ளைநோயில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் புதிய வேலைகளுக்கான பற்றாக்குறையால் அவை பாதிக்கப்படக்கூடும் என்றது அது.

