உலகப் பொருளியல் மந்தநிலை சாத்தியம்

உலகப் பொருளியல் மந்தநிலை சாத்தியம்

1 mins read
d3947f3b-e9a5-4afb-8304-36a1be435143
-
Google News Preferred Icon

டாவோஸ்: தனியார் மற்றும் பொதுத்துறை தலைமைப் பொருளியல் நிபுணர்களில் மூவரில் இருவர் உலகம் இவ்வாண்டு பொருளியல் மந்தத்தைச் சந்திக்கும் என்று கூறியுள்ளனர்.

உலகப் பொருளியல் மன்றம் இவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பொருளியல் மந்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக

18 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் இதில் பாதிப் பேர்தான் மந்தநிலை வரும் வாய்ப்பு அதிகம் என்று கூறியிருந்தனர்.

"தற்போதைய அதிக பணவீக்கம், குறைவான வளர்ச்சி, கடன் நிறைந்த சூழல் ஆகியன வளர்ச்சியைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் குறைக் கின்றன," என்று உலகப் பொருளியல் மன்றத்தின் நிர்வாக இயக்குநர் சாடியா ஸாஹிடி, ஆய்வு முடிவுகள் இணைக்கப் பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.