'500,000 வெளிநாட்டு ஊழியரால் மலேசியர் வேலை பறிபோகாது'

'500,000 வெளிநாட்டு ஊழியரால் மலேசியர் வேலை பறிபோகாது'

2 mins read
d94be025-b09a-4338-b992-105356b31e5d
-

பத்து காஜா: இவ்­வாண்­டில் 500,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மலே­சி­யா­விற்கு வரு­வர் என எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யில், அவர்­க­ளால் மலே­சி­யர்­க­ளின் வேலை­வாய்ப்­பு­கள் பாதிக்­கப்­ப­டாது என்று அந்­நாட்­டின் மனி­த­வள அமைச்­சர் வி.சிவ­கு­மார் (படம்) தெரி­வித்து இருக்­கி­றார்.

பதி­னைந்து ஆசிய நாடு­களில் இருந்து அந்த ஊழி­யர்­கள் வர­வ­ழைக்­கப்­ப­டு­வர் என்­றும் உள்­ளூர்­வா­சி­கள் ஆர்­வம் காட்­டாத தோட்­டத்­தொ­ழில், வேளாண்மை, கட்­டு­மா­னம் உள்­ளிட்ட துறை­களில் அவர்­கள் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வர் என்­றும் திரு சிவ­கு­மார் கூறி­ய­தாக பெர்­னாமா செய்தி தெரி­விக்­கிறது.

"இத்­து­றை­களில் வேலை பார்க்க உள்­ளூர் தொழி­லா­ளர்­கள் கிடைப்­பது மிக­வும் கடி­ன­மாக உள்­ளது. அத­னால், அத்­து­றை­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­களை அதி­கம் சார்ந்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

"அத்­து­றை­க­ளுக்­குப் போது­மான ஊழி­யர்­களை வழங்க முடி­யா­வி­டில், அவற்­றின் செயல்­பாடு குறைந்து, பேர­ள­வில் இழப்பு ஏற்­ப­ட­லாம்," என்­றார் அமைச்­சர்.

பூசிங்­கில் நேற்று முன்­தி­னம் (ஞாயிற்­றுக்­கி­ழமை) இரவு நடந்த கூண்­டு­வி­ளக்கு ஒளி­யூட்டு விழா­வில் பங்­கேற்­ற­போது, பத்து காஜா தொகுதி நாடா­ளு­ம ன்ற உறுப்­பி­ன­ரான திரு சிவ­கு­மார் இவ்­வாறு தெரி­வித்­தார்.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக 700,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அவர்­க­ளு­டைய சொந்த நாட்­டிற்­குத் திரும்­பி­விட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அத­னால், ஊழி­யர் பற்­றாக்­

கு­றைப் பிரச்­சி­னையை உட­ன­டி­யா­கத் தீர்க்க வேண்­டும் என்­றும் இல்­லா­வி­டில் அது பொரு­ளி­ய­லில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்­றும் அவர் சொன்­னார்.

இந்­நி­லை­யில், வெளி­நாட்டு ஊழி­யர்­களை விரைந்து வேலைக்கு எடுக்க ஏது­வாக, அதற்­கான நடை­மு­றையை எளி­தாக்­கு­வது தொடர்­பில் மனி­த­வள அமைச்­சும் சட்ட அமைச்­சும் ஓர் உடன்­பாட்டை எட்­டி­விட்­டன என்று திரு சிவ­கு­மார் தெரி­வித்­தார்.

முன்­ன­தாக, கொவிட்-19 பெருந்­தொற்­றைத் தொடர்ந்து, நாட்­டின் பொரு­ளி­யல் மீட்­சிக்கு உத­வும் வகை­யில் ஊழியர் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என்று தேசிய மீட்சி மன்ற உறுப்­பி­னர் மைக்­கல் காங் கடந்த அக்­டோ­ப­ரில் தெரி­வித்­தி­ருந்­தார்.

குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் எதிர்­கொள்­ளும் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைப் போக்க மலே­சி­யா­விற்கு 500,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர் என்று அப்போது அவர் கூறினார்.