பெட்டாலிங் ஜெயா: பினாங்கு மாநிலத்தில் கஞ்சா போதைப் பொருள் விநியோகம் செய்த தாகக் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் முன்னாள் காவல்துறை அதிகாரி. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜாலான் பென்டஹரா வில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது இந்த மூவரும் பிடிபட்டதாக பினாங்கு காவல்துறைத் தலைமை அதிகாரி சுஹைலி ஸைன் கூறினார்.
"கைதான ஆடவர் 11 ஆண்டு காலம் காவல்துறை யில் பணியாற்றிய பின்னர் 2018 முதல் போதைப்பொருள் குற்றங் களில் ஈடுபடத் தொடங்கினார். அவரிடம் இருந்து 10.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கைதான மற்றவர்கள் அவரது மனைவி, நண்பர்," என்றும் திரு சுஹைலி கூறினார்.

