ஹனோய்: வியட்னாம் அதிபர் நுயேன் சுவான் ஃபுக் பதவி விலகியுள்ளார்.
அவரது கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரிந்த அதிகாரிகள் விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியதை அடுத்து, 68 வயது திரு ஃபுக் இம்
முடிவை எடுத்தார்.
இவர் வியட்னாம்
அதிபராவதற்கு முன்பு அந்நாட்டின் பிரதமராக 2016ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரது பதவி விலகலை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டதா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

