கொழும்பு: கடுமையான பொருளியல் நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3.8 பில்லியன்) நிதியுதவி கிடைக்கக்கூடும்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்ததை அடுத்து, நிதி கிடைப்பதற்கான சாத்தியம் வலுவடைந்துள்ளது.
இலங்கைக்குக் கடன் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா வழங்கும் ஆதரவு குறித்தும் நிதியுதவி குறித்தும் கூடுதல் விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்
படும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் அனைத்துலகப் பண நிதியம் வழங்கும் நிதி
யுதவி இலங்கைக்குக் கிடைக்கும் என்று அந்நாட்டின் துணை நிதி அமைச்சர் ஷேஹன் செமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நிறைவடைந்ததாக இலங்கை அதிபர் ரணில்
விக்ரமசிங்க கடந்த வாரம் கூறினார். இன்று சீனாவிலிருந்து பிரமுகர்கள் இலங்கைக்குச் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அடுத்த மாதம் 4ஆம் தேதியன்று இலங்கை அதன் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறது.