கனமழையால் 20 பேர் பலி; விரைகிறார் பைடன்

கனமழையால் 20 பேர் பலி; விரைகிறார் பைடன்

1 mins read
46698481-3418-4b72-b8df-bd10388f265f
-

லாஸ் ஏஞ்­ச­லிஸ்: கலி­ஃபோர்­னி­யாவை அண்மை நாள்­க­ளா­கப் புரட்­டிப்­போட்ட கன­மழை,

வெள்­ளம் கார­ண­மாக மாண்­டோர் எண்ணிக்கை 20ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அம்­மா­நி­லத்­தில் உயிர்ச்­சே­தம் மட்­டு­மின்றி அதி­கப் பொருள் சேத­மும் ஏற்­பட்­டுள்­ளது.

தற்­போது மழை குறைந்து வரு­வ­தாக அமெ­ரிக்க வானிலை மையம் தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், நிலை­மையை நேரில் காண அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கலி­ஃபோர்­னியா செல்ல இருப்­ப­தாக வெள்ளை மாளிகை அறி­வித்­துள்­ளது.

கலி­ஃபோர்­னி­யாவை கடந்த மாதம் டிசம்­பர் 26ஆம் தேதி­யி­

லி­ருந்து இடை­வி­டாது உலுக்­கிய கன­மழை கார­ண­மாக ஆயி­ரக்­

க­ணக்­கா­னோர் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.

அவர்­கள் இன்­னும் துயர்

துடைப்பு மையங்­களில் இருப்­ப­தாக கலி­ஃபோர்­னியா ஆளு­நர் கெவின் நியூ­சம் தெரி­வித்­தார்.

அதி­பர் பைடன் நாளை கலி­ஃபோர்­னி­யா­வுக்­குச் சென்று

மீட்­புப் பணி­யா­ளர்­க­ளைச் சந்­திக்க இருக்­கி­றார்.

கன­மழை, வெள்­ளம் கார­ண­மா­கப் பாதிக்­கப்­பட்ட நக­ரங்­

க­ளுக்கு அவர் நேரில் சென்று சேத அளவை ஆய்வு மேற்­கொள்ள இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அதன்­மூ­லம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் அங்குள்ள பகுதிகளுக்கும் எத்தகைய ஆதரவு வழங்­கு­வது என்­பது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும்.

அதி­பர் பைடன் செல்ல இருக்­கும் இடங்­கள் குறித்து வெள்ளை மாளிகை கூடு­தல் விவ­ரங்­களை வெளி­யி­ட­வில்லை. கலி­ஃபோர்­னி­யா­வில் கன­மழை பெய்­வ­தற்கு முன்பு அங்கு வர­லாறு காணாத வறட்சி ஏற்­பட்­டது.

சில இடங்­களில் வறட்­சி­நிலை இன்­னும் நீடிக்­கிறது. மழைக்­

கா­லத்­துக்கு இன்னும் சில மாதங்­கள் இருப்­ப­தால் தண்­ணீ­ரைச் சேமிக்­கும்­படி கலிஃபோர்னியா மக்­களை அதி­காரிகள் கேட்­டுக்­கொண்டுள்­ள­னர்.