பெரிய மாற்றங்கள் கூடாது; ஃபிஜி ராணுவம் எச்சரிக்கை

பெரிய மாற்றங்கள் கூடாது; ஃபிஜி ராணுவம் எச்சரிக்கை

1 mins read
06ca771a-612d-4847-959c-f8a2916a9874
-

சுவா: ஃபிஜியில் அண்­மை­யில் நடந்து முடிந்த தேர்­த­லில் மிகக் கடு­மை­யான போட்டி நில­வி­யது. முடி­வில் ஃபிரேங்க் பைனி­ம­ரா­மா­வின் தலை­மை­யி­லான அர­சாங்­கம் ஆட்சி அதி­கா­ரத்தை இழந்­தது.

ஆட்­சிக் கவிழ்ப்­புக்­குப் பிறகு கடந்த 16 ஆண்­டு­க­ளாக திரு பைனி­ம­ராமா ஃபிஜியை ஆட்சி செய்து வந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது திரு சிட்­டி­வேனி ரபுக்கா ஃபிஜியின் பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்­றுள்­ளார்.

இதற்­கி­டையே, ஆட்­சி­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள புதிய அர­சாங்­கம் பல மாற்­றங்­க­ளைக் கொண்டு வரு­வ­தா­க­வும் ஜன­நா­ய­கத்­தைச் சீர்­கு­லைக்­கும் வகை­யில் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் அது ஈடு­ப­டக்­கூ­டாது என்­றும் ஃபிஜி ராணு­வத்

தள­பதி மேஜர் ஜென­ரல் ஜோன் கலோ­னி­வால் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.