புத்ராஜெயா: தமது ஆட்சியில் தம்மை மையமாகக் கொண்ட சின்னங்கள் அமைக்கப்படாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் ஏற்கெனவே பல முக்கிய சின்னங்கள் இருப்பதாக அவர் கூறினார்.
கோலாலம்பூரை மேம்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வர்த்தகங்கள் மேம்பட அவற்றுக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய இருப்பதாக திரு அன்வார் கூறினார்.

