வியட்னாமை வீழ்த்தி கிண்ணம் ஏந்திய தாய்லாந்து
பேங்காங்: ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் காற்பந்துப் போட்டியில் வாகை சூடி ஏழாவது முறையாக கிண்ணத்தை ஏந்தி சாதனை படைத்துள்ளது தாய்லாந்து.
நேற்று முன்தினம் இரவு தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது சுற்று நடைபெற்றது. அதில் தாய்லாந்து 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. வியட்னாமில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் இரு குழுக்களும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன.
ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 3-2 எனும் கோல் கணக்கில் தாய்லாந்து வெற்றி பெற்றது.
பாகாங் குழுவின் தலைமைப் பயிற்றுநராக ஃபாண்டி நியமனம்
குவாந்தான்: மலேசிய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் பாகாங் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சிங்கப்பூரின் முன்னாள் நட்சத்திர வீரர் ஃபாண்டி அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபாண்டிக்கு தற்பொழுது வயது 60. அவர் 1992ஆம் ஆண்டில் பாகாங் குழுவுக்காக விளையாடினார். அவ்வாண்டில் மலேசிய லீக் போட்டியிலும் மலேசியக் கிண்ணப் போட்டியிலும் பாகாங் வென்றது.

