சூழ்நிலை எப்படி மாறினாலும் பேசித் தீர்வுகாண இரு நாட்டு அமைச்சர்கள் முடிவு சீன-அமெரிக்கத் தலைவர்கள் பதற்றத்தைத் தணிக்க உறுதி

சூழ்நிலை எப்படி மாறினாலும் பேசித் தீர்வுகாண இரு நாட்டு அமைச்சர்கள் முடிவு சீன-அமெரிக்கத் தலைவர்கள் பதற்றத்தைத் தணிக்க உறுதி

2 mins read
c719ce23-9fb9-4abc-8c57-604a5b53c43e
வேறு­பா­டு­க­ளைக் களை­ய­வும் இரு தரப்­புக்­கும் இடை­யி­லான போட்­டா­போட்டி பெரும் பிரச்­சினை­யா­கி­வி­டா­மல் தடுக்­கவும் இரு தலை­வர்­களும் உறுதி கூறினர். படம்: ராய்ட்டர்ஸ் -

சூரிச்: அமெ­ரிக்க நிதி அமைச்­சர் ஜெனட் எல்லன், சீன துணைப் பிர­த­மர் லியு ஹி இரு­வ­ரும் சந்­தித்­துப் பேசி­னர்.

வேறு­பா­டு­க­ளைக் களை­ய­வும் இரு தரப்­புக்­கும் இடை­யி­லான போட்­டா­போட்டி பெரும் பிரச்­சினை­யா­கி­வி­டா­மல் தடுக்­கவும் இரு தலை­வர்­களும் உறுதி கூறினர். சீன-அமெ­ரிக்க அதி­பர்­கள் சென்ற நவம்­ப­ரில் சந்­தித்து இரு தரப்பு ஒத்­து­ழைப்­புக்­கான வழி­முறை­களை ஆராய்ந்­த­னர்.

அதற்­குப் பிறகு ஆக உய­ரிய நிலை­யில் இந்த இரு நாடு­களுக்கு இடை­யி­லான இந்தச் சந்­திப்பு சுவிட்­சர்­லாந்­தில் நடந்­தது.

அமெ­ரிக்­கா­வு­டன் சேர்ந்து செயல்­பட்டு இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் பொது­வான தளத்தை ஏற்­ப­டுத்த தான் தயார் என்று சீன துணைப் பிர­த­மர் லியு தெரி­வித்­தார்.

சூழ்­நி­லை­கள் எப்­படி மாறி­னாலும் நாம் எப்­போ­துமே பிரச்­சி­னை­க­ளுக்குப் பேச்சு மூலமே தீர்வு காண வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

செய்­தி­யா­ளர்­கள் உட­னி­ருக்க சீன துணைப் பிர­த­ம­ரி­டம் பேசிய அமெ­ரிக்க நிதி அமைச்­சர், தவ­றான புரிந்­து­ணர்வு கார­ண­மாக தேவை­யில்­லா­மல் இரு தரப்பு பொரு­ளி­யல், நிதி உற­வு­க­ளைப் பாதித்­து­விட அனு­ம­தித்­து­வி­டக் கூடாது என்று தெரி­வித்­தார்.

சீனா, அமெ­ரிக்கா இரு நாடு­க­ளுமே பொரு­ளி­யல் சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­றன. அவற்­றோடு, உக்­ரேன் போர் கார­ண­மாக உல­கப் பொரு­ளி­யல் வளர்ச்சி பாதிக்­கப்­பட்டு உள்­ளது.

சுவிட்­சர்­லாந்­தின் டாவோஸ் நக­ரில் நடக்­கும் உல­கப் பொரு­ளி­யல் அரங்­கம் அமைப்­பின் கூட்டத்­தில் சீனா­வின் பொருளி­யல் இலக்­கு­களை முன்னதாக திரு லியு முன்­வைத்­தார்.

கடு­மை­யா­கப் பாடு­பட்­டால் இந்த ஆண்­டில் சீனா­வின் வளர்ச்சி வழக்­க­மான அள­வுக்கு திரும்­பி­வி­டும். சீனப் பொரு­ளி­யல் கணி­ச­மான மேம்­பா­டு­க­ளைக் காணும் என்று அவர் கூறி­னார்.

சுவிட்­சர்­லாந்து பய­ணத்தை முடித்­துக்­கொண்டு ஸாம்­பியா, சென­கல், தென் ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்­கு அமெ­ரிக்க நிதி­அமைச்­சர் செல்­கி­றார்.

இந்­தோ­னீ­சி­யா­வில் கடந்த நவம்­ப­ரில் ஜி20 கூட்­டம் நடந்தது. அதில் கலந்­து­கொண்ட அமெரிக்க அதி­பர் ஜோ பைட­னும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் சந்­தித்­த­னர்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் ஒத்­து­ழைப்­புக்­கான வழி­களைப் பற்றி ஆரா­யு­மாறு அதி­கா­ரி­களுக்கு உத்­த­ர­வி­டப்­போ­வ­தாக அந்த இரு தலை­வர்­களும் அப்­போது தெரி­வித்து இருந்­த­னர்.