'பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகள் அதிகரிக்கும்'

'பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகள் அதிகரிக்கும்'

1 mins read
d7618a34-4036-4792-9221-579e0dd49d8b
பரு­வ­நிலை தொடர்­பான வழக்­கு­களும் உல­க­ள­வில் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­விட்­ட­தாக ஒரு குழு தெரி­வித்­துள்­ளது. படம்: ஏஎஃப்பி -

டாவோஸ்: பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக உல­கம் வெப்­ப­ம­டை­கிறது. இத­னால் அனைத்­து­லக அள­வில் கவலை அதி­க­ரித்து இருக்­கிறது.

அதோடு, பரு­வ­நிலை தொடர்­பான வழக்­கு­களும் உல­க­ள­வில் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­விட்­ட­தாக ஒரு குழு தெரி­வித்­துள்­ளது.

சுவிட்­சர்­லாந்­தின் டாவோஸ் நக­ரில் நடக்­கும் உல­கப் பொரு­ளி­யல் அரங்­கம் அமைப்பு கூட்­டத்­தில் பரு­வ­நிலை மாற்ற வழக்­கு­கள் தொடர்­பான குழு அந்­தத் தக­வலை வெளி­யிட்­டது.

அந்­தக் குழு விவா­தத்தை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசி­ரி­யர் ஜாய்மி ஹோ வழி நடத்­தி­னார்.

'நீதி­மன்­றத்­தில் சந்­திக்­கி­றேன்! பரு­வ­நிலை வழக்­கு­கள் ஏறு­மு­கம்' என்ற தலைப்­பில் குழு­வி­னர் விவா­தித்­த­னர்.

பரு­வ­நிலை தொடர்­பான நட வடிக்­கை­கள் இடம்­பெற வேண்டு மென விரும்­பும் தரப்­பி­னர் வழக்­கு­க­ளைக் கையில் எடுக்­கும் போக்கு கவர்ச்­சி­க­ர­மான ஓர் உத்­தி­யாக ஆகி­யி­ருப்பதாகவும் இந்தப் போக்கு தொட­ரும் என்றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

உல­கம் முழு­வ­தும் ஏறக்­குறைய 2,000 வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டன. அவற்­றில் கால்­வாசி கடந்த இரண்­டாண்டு­களில் இடம்­பெற்றவை என்­பதைக் குழு சுட்­டி­யது.