ஹாங்காங்: இன்னும் ஓராண்டுக்குள் கொவிட்-19 தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றிவிடலாம் என்று தான் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக ஹாங்காங் தலைவர் ஜான் லீ நேற்று தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்படுவதன் மூலம் ஹாங்காங் உலக நிதி மையம் என்ற முறையில் வழக்கமான நிலைக்குத் திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பெரும்பாலான கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அகற்றப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

