இந்தோனீசியா கட்டடத் திட்டம்

இந்தோனீசியா கட்டடத் திட்டம்

1 mins read
f90923d4-de78-49f7-9d53-0615bbac1894
புதிய தலை­ந­கர் போர்­னியோ தீவில் காட்­டு­வ­ளப் பகுதி ஒன்­றில் US$32 பில்­லி­யன் செல­வில் உரு­வா­கும் என்று 2019ஆம் ஆண்டு திட்­டம் ஒன்றை இந்­தோ­னீ­சியா அறி­வித்­தது. படம்: பிக்ஸாபே -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சியா, போர்­னியோ தீவில் புதிய தலை­ந­கரை உரு­வாக்­கு­கிறது. அங்கு ஆயிரக்­க­ணக்­கான அர­சு சேவை­யா­ளர்­கள் இட­மா­ற­விருக்கிறார்கள்.

அதற்­காக US$2.7 பில்­லி­யன் (S$3.6 பில்­லி­யன்) மதிப்­புள்ள அடுக்­கு­மாடி கட்­ட­டங்­க­ளைக் கட்­டும் பணியை 2023 இரண்­டா­வது காலாண்­டில் இந்­தோ­னீ­சியா தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­வின் தலை­ந­க­ராக இப்­போது ஜகார்த்தா இருக்­கிறது. புதிய தலை­ந­கர் போர்­னியோ தீவில் காட்­டு­வ­ளப் பகுதி ஒன்­றில் US$32 பில்­லி­யன் செல­வில் உரு­வா­கும் என்று 2019ஆம் ஆண்டு திட்­டம் ஒன்றை இந்­தோ­னீ­சியா அறி­வித்­தது.

புதிய தலை­ந­க­ருக்கு 'நுசாந்தாரா' என்று பெய­ரி­டப்­படும் என ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.