விளையாட்டுச் செய்தி நகர முடியவில்லை என்கிறார் நடால்

விளையாட்டுச் செய்தி நகர முடியவில்லை என்கிறார் நடால்

1 mins read
8184f9f0-9b6d-4087-bc71-2d2075904716
-

மெல்­பெர்ன்: ஆஸ்­தி­ரே­லிய ஓபன் டென்­னிஸ் போட்­டித் தொடர் இப்­போது மெல்­பெர்ன் நக­ரில் நடந்து வரு­கிறது. வரும் 29ஆம் தேதி வரை பல சுற்றுப் போட்­டி­கள் அதில் இடம்­பெ­று­கின்­றன.

நடப்பு சாம்­பி­யன் ரபேல் நடால், வேறொரு டென்­னிஸ் மட்­டை­யைப் பயன்­ப­டுத்தி ஜாக் டிரே­பரை வீழ்த்தி 2வது சுற்­றுக்கு முன்­னே­றி­னார்.

அடுத்த போட்­டி­யில் தர­வ­ரி­சை­யில் 63வது இடத்­தில் இருக்­கும் அமெ­ரிக்க வீரர் மெக்­கன்­ஸி­யு­டன் மோதி­னார். கடை­சி­யில் 6-4, 6-4, 7-5 என்ற கணக்­கில் மெக்­கன்ஸி வெற்றி பெற்­று­விட்­டார்.

போட்­டி­யின்­போது நடா­லுக்கு உடல்­நலப் பாதிப்பு ஏற்­பட்­டது. இதனால் கிராண்ட்ஸ்­லாம் பட்­டத்­திற்­கான அவ­ரு­டைய கனவு தகர்ந்து­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

"இடுப்­பில் காயம் அடைந்­து­விட்­ட­தால் என்­னால் நக­ரக்­கூட முடி­ய­வில்லை," என்­றார் அவர்.

"என்ன என்­பது எனக்கு சரி­யா­கத் தெரி­ய­வில்லை. வலி மூட்­டிலா தசை­யிலா என்­பது சரி­யா­கப் புரி­ய­வில்லை. எனக்கு இடுப்பு வலி பிரச்­சினை என்­போ­தும் உண்டு.

"அதற்கு சிகிச்சை எடுத்­துக் கொண்டு இருக்­கி­றேன். ஆனால், இப்­போது அந்த வலி அதி­க­ரித்து­விட்­டது. நக­ரக்­கூடிய முடி­ய­வில்லை," என்று நடால் கூறினார்.