ஓய்வூதிய சீர்திருத்தம்: பிரான்ஸில் வேலைநிறுத்தம்

1 mins read
d1966883-f979-4afd-b2f8-25c998979f08
-

பாரிஸ்: பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வல் மெக்­ரான் அறி­வித்த ஓய்­வூ­திய சீர்­தி­ருத்­தத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து நாடு தழு­விய வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் அந்­நாட்டு மக்­கள் நேற்று ஈடு­பட்­ட­னர்.

பிரான்­சில் ஓய்­வு­பெ­றும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்த பிரெஞ்சு அர­சாங்­கம் திட்­ட­மிட்­டதை அடுத்து, அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்தன.

வேலை­நி­றுத்­தப் போராட்­டம் கார­ண­மாக பிரான்­சில் நேற்று ரயில் சேவை­கள் முடங்­கின, பள்­ளி­கள் மூடப்­பட்­டன, பல துறை­

க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள் வேலைக்­குச் செல்­ல­வில்லை.

இந்த வேலை­நி­றுத்­தப் போராட்­டம் அதி­பர் மெக்­ரானுக்கு ஏற்­பட்­டுள்ள மிகக் கடு­மை­யான சவால் என அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

நாட்­டின் ஓய்­வூ­திய

கட்­ட­மைப்பு நொடித்­துப்­போ­கா­மல் இருக்க இந்­தச் சீர்­தி­ருத்­தம் மிக­வும் அவ­சி­யம் என்று அவர் கூறி வரு­கி­றார். இருப்­பி­னும், இதை பிரெஞ்சு மக்­கள் ஏற்க மறுக்­கின்­ற­னர்.

பிரான்சின் கோர்சிக்கா தீவில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி