பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரான் அறிவித்த ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் நேற்று ஈடுபட்டனர்.
பிரான்சில் ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்த பிரெஞ்சு அரசாங்கம் திட்டமிட்டதை அடுத்து, அதிருப்திக் குரல்கள் எழுந்தன.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பிரான்சில் நேற்று ரயில் சேவைகள் முடங்கின, பள்ளிகள் மூடப்பட்டன, பல துறை
களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைக்குச் செல்லவில்லை.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அதிபர் மெக்ரானுக்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சவால் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் ஓய்வூதிய
கட்டமைப்பு நொடித்துப்போகாமல் இருக்க இந்தச் சீர்திருத்தம் மிகவும் அவசியம் என்று அவர் கூறி வருகிறார். இருப்பினும், இதை பிரெஞ்சு மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.
பிரான்சின் கோர்சிக்கா தீவில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

