பெர்லிங்: ஜெர்மனியின் மக்கள்தொகை முன் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.
அந்நாட்டின் மக்கள்தொகை கடந்த ஆண்டு 84.3 மில்லியனாகப் பதிவானது.
அதற்கு முன்பு மூன்று ஆண்டு
களாக அது எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது.
இந்த மக்கள்தொகை அதிகரிப்புக்கு குடியேறிகளின் வருகையே முக்கிய காரணம்.
குறிப்பாக, போரிலிருந்து தப்பி ஜெர்மனிக்குச் சென்ற உக்ரேனிய அகதிகளால் ஜெர்மனியின் மக்கள்தொகை ஏற்றம் கண்டுள்ளது.
2021ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் ஜெர்மனியில் கூடுதலாக 1.1 மில்லியன் பேர் இருந்ததாக அந்நாட்டின் அரசாங்கம்
புள்ளிவிவரங்களை நேற்று வெளியிட்டது.
ஜெர்மனியில் குறைவான பிறப்பு விகிதம், மூப்படையும் மக்கள்தொகை நிலவும்போதிலும் அதிக அளவிலான குடியேறி
களின் வருகையால் மக்கள்தொகை அதிகரித்துள்ளது.

