கோலாலம்பூர்: ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தீர்ப்புக்கு எதிராக நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார்.
மேல்முறையீட்டு வழக்கிற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை வழக்கிலிருந்து விலக்க நஜிப் விண்ணப்பம் செய்திருந்தார்.
ஆனால் நஜிப்பின் விண்ணப்பத்தை மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

