உக்ரேனுக்குக் கூடுதலாக $3.3 பி. ராணுவ உதவி

உக்ரேனுக்குக் கூடுதலாக $3.3 பி. ராணுவ உதவி

1 mins read
20e61155-ac48-43cd-8796-187c72629eee
-

வாஷிங்­டன்: உக்­ரே­னுக்கு 2.5 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$3.3 பில்­லி­யன்) பெறு­மா­ன­முள்ள ராணுவ உத­வியை வழங்க இருப்­ப­தாக அமெ­ரிக்கா அறி­வித்­துள்­ளது.

இதில் நூற்­றுக்­க­ணக்­கான கவச வாக­னங்­கள், ராக்­கெட்­டு­கள், பீரங்கி குண்­டு­கள் ஆகி­யவை அடங்­கும்.

இந்த உத­வித் திட்­டத்­தில் 59 பிராட்லி போர் வாக­னங்­கள், 90 ஸ்ட்­ரைக்­கர் கவச வாக­னம், 53 கண்­ணி­வெடி அகற்றும் வாக­னங்­கள், 350 உயர் நட­மாட்ட பன்­னோக்கு வாக­னங்­கள் முத­லி­யவை அடங்­கும் என்று அமெ­ரிக்க தற்­காப்­புத் துறை கூறி­யது.

கவச வாக­ன­மான பிராட்லி போர் வாக­னம் சக்­தி­வாய்ந்த துப்­பாக்­கி­யைக் கொண்­டது.

1980களின் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து பல்­வேறு போர்­க்க­ளங்­களில் அமெ­ரிக்­கப் படை­கள் அதைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

ஒட்­டு­மொத்த அடிப்­ப­டை­யில், ரஷ்­யா­வுக்கு எதி­ரா­கப் போரிட்டு வரும் உக்­ரே­னின் பாது­காப்­புக்­காக 27.4 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் பெறு­மா­ன­முள்ள ஆயு­தங்­களை அமெ­ரிக்கா வழங்­கி­யுள்­ளது. உக்­ரே­னுக்கு உதவி செய்­யும் நோக்­கில் பில்­லி­யன்­க­ணக்­கான அமெ­ரிக்க டாலர் பெறு­மா­ன­முள்ள ஆயு­தங்­களை வழங்க மேற்­கத்­திய நாடு­கள் உறுதி அளித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், பனிக்­கா­ல­மாக இருப்­ப­தால் நிலவரம் ரஷ்­யா­வுக்­குச் சாத­க­மாக இருக்­கும் என்று மேற்­கத்­திய நாடு­கள் அஞ்­சு­கின்­றன. தனது படை­களை மீண்­டும் ஒன்று திரட்டி உக்­ரே­னுக்கு எதி­ரா­கப் பெரு­ம­ள­வி­லான தாக்­கு­தலை ரஷ்யா நடத்­தக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எனவே, மேற்­கத்­திய நாடு­

க­ளி­டம் உக்­ரேன் கூடு­தல் உதவி கேட்டு வரு­கிறது.