இன்னும் சில நாள்களில் சீனாவிடமிருந்து நிதி உத்தரவாதங்களை எதிர்பார்க்கும் இலங்கை

இன்னும் சில நாள்களில் சீனாவிடமிருந்து நிதி உத்தரவாதங்களை எதிர்பார்க்கும் இலங்கை

2 mins read
4c45de00-595c-451c-bc75-38ebb6c94ba9
-

கொழும்பு: பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் நிலை­கு­லைந்­தி­ருக்­கும் இலங்கை, அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தி­ட­மி­ருந்து 2.9 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$3.8 பில்­லி­யன்) பெறு­மான கட­னைப் பெறும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது.

இதற்கு அத­னி­டம் கடன் கொடுத்த நாடு­க­ளின் ஆத­ரவு அந்­நாட்­டுக்­குத் தேவை. இலங்­கை­யின் கடன் மறு­சீ­ர­மைப்­புத் திட்­டத்­துக்கு இந்­தியா ஏற்­கெ­னவே ஆத­ரவு தெரி­வித்­து­விட்­டது.

கூடு­தல் ஆத­ரவு வழங்­கப்­படும் என்­றும் இலங்­கைக்கு இந்­தியா உறுதி அளித்­துள்­ளது. இப்­போது சீனா­வின் ஆத­ரவை இலங்கை எதிர்­பார்க்­கிறது.

22 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட இலங்கை கடந்த ஓராண்­டாக வெளி­நாட்டு நாண­யப் பற்­றாக்­குறை, நினைத்­துப் பார்க்க முடி­யாத பண­வீக்­கம், மிகக் கடு­மை­யான பொரு­ளி­யல் மந்­த­நிலை ஆகி­ய­வற்­றால் வெகு­வா­க பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

1948ஆம் ஆண்­டில் பிரிட்­ட­னி­ட­மி­ருந்து சுதந்­தி­ரம் பெற்ற பிறகு இதுவே இலங்கை சந்­திக்­கும் ஆக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டி­நிலை.

இதி­லி­ருந்து மீண்­டு­வர அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தி­ட­மி­ருந்து இலங்கை நிதி­யு­தவியை நாடி­யுள்­ளது.

"கடன் மறு­சீ­ர­மைப்­புத் திட்­டம் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­கள் குறித்த விவ­ரங்­களை வெளி­யி­டு­வது சிர­மம். அவை ரக­சி­யம் காக்­கப்­பட வேண்­டி­யவை.

"இருப்­பி­னும், சீனா­வு­ட­னான பேச்­சு­வார்த்தை இறு­தி­க் கட்­டத்­தில் உள்­ளது என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கி­றோம். இன்­னும் சில நாள்­களில் அத­னி­ட­மி­ருந்து நிதி உத்­த­ர­வா­தங்­கள் கிடைத்­து­வி­டும் என நம்­பு­கி­றோம்," என்று இலங்­கை­யின் துணை நிதிச் செய­லா­ளர் பிரி­யந்தா ரத்­ன­நா­யக தெரி­வித்­தார்.

இந்த விவ­கா­ரம் குறித்து சீனா இலங்­கை­யு­டன் நீடித்த தொடர்­பில் இருந்து வரு­வ­தாக அவர் கூறி­னார். 7.4 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் கடனை சீனா­வி­டம் இலங்கை திருப்­பிக் கொடுக்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யில் முத­லீடு செய்ய இந்­தியா கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தாக இலங்­கைக்கு இரண்டு நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்ட இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர் தெரி­வித்­தார். இலங்கை வெளி­யு­றவு அமைச்­சர் அலி சப்­ரியை அவர் நேற்று முன்­தி­னம் சந்­தித்­துப் பேசி­னார். உள்­கட்­ட­மைப்பு, இணைப்பு, எரி­சக்தி தொழில்­துறை, சுகா­தா­ரச் சேவை­கள் ஆகி­யவை தொடர்­பாக இரு­வ­ரும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

"இந்­திய முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்­கும் நோக்­கு­டன் வர்த்­த­கத்­துக்கு ஏற்­பு­டைய சூழலை இலங்கை அர­சாங்­கம் அமைத்­துத் தரும் என நம்­பு­கி­றோம்," என்று திரு ஜெய்­சங்­கர் தெரி­வித்­தார்.