சாபா, சரவாக் எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்த 1 பி. ரிங்கிட்

சாபா, சரவாக் எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்த 1 பி. ரிங்கிட்

1 mins read
4fc52fe5-87d2-4b2c-aed8-518625415655
-

கூச்­சிங்: மலே­சி­யா­வின் சாபா, சர­வாக் மாநி­லங்­க­ளின் எல்­லைக் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்த 1 பில்­லி­யன் ரிங்­கிட் (S$309 மில்­லி­யன்) வழங்­கப்­படும் என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் அறி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, அவ்­விரு மாநி­லங்­க­ளின் எல்லை உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுக்­கா­க­வும் எல்­லைப் பகு­தி­யில் உள்ள சுங்­கத்­துறை, குடி­நு­ழைவு, தனி­மைப்­

ப­டுத்­து­தல், பாது­காப்பு மையத்­தின் ஆற்­றலை அதி­க­ரிப்­ப­தற்­கா­வும் கூடு­த­லாக 1 பில்­லி­யன் ரிங்­கிட் வழங்க மலே­சிய நிதி அமைச்சு ஒப்­ப­தல் வழங்­கி­யுள்­ளது. போர்­னியோ தீவில் இருக்­கும் சாபா, சர­வாக் மாநி­லங்­கள் இந்­தோ­னீ­சி­யா­வு­டன் எல்­லை­யைப் பகிர்ந்­து­கொள்­கின்­றன.

போர்­னி­யோவின் இந்­தோ­னீ­

சி­யா­வின் கட்­டுப்­பாட்­டில் உள்ள பகுதி கலி­மந்­தான் என்று அழைக்­கப்­ப­டு­கிறது. இந்­தோ­னீ­சி­யா­வின் புதிய தலை­ந­க­ராக கலி­மந்­தா­னில் உள்ள நுசந்­தா­ராவை அமைக்க அந்­நாட்டு அதி­பர் ஜோக்கோ விடோடோ திட்­ட­மிட்­டுள்­ளார்.

இது­கு­றித்து அவ­ரு­டன் கலந்­து­ரை­யா­டிய பிறகு சாபா­வுக்­கும் சர­வாக்­கிற்­கும் எல்லை உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுக்­காக நிதி வழங்க ஒப்­பந்­தல் வழங்­கி­ய­தாக திரு அன்­வார் தெரி­வித்­தார்.

வழக்­கற்­றுப்­போன அணு­கு­

மு­றை­யைக் கடைப்­பி­டிக்­கும் நாடு என்ற அவ­பெ­யர் மலே­சி­யா­வுக்­குக் கிடைத்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு எடுத்­த­தாக திரு அன்­வார் கூறி­னார்.