இருக்கைவார் அணியாது காரில் சென்ற ரிஷி சுனக்

இருக்கைவார் அணியாது காரில் சென்ற ரிஷி சுனக்

1 mins read
39d1ca89-2dfc-4c94-9f58-df5f8722f08b
-

லண்­டன்: பிரிட்­டிஷ் பிர­த­மர் ரிஷி சுனக் இருக்­கை­வார் அணி­யா­மல் காரில் சென்ற காணொளி வெளி­யாகி சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

காரின் பின்­னி­ருக்­கை­யில் இருக்­கை­வார் அணி­யா­மல் அமர்ந்­த­படி, நாட்­டின் வளர்ச்­சியை அதி­க­ரிப்­ப­தற்­கான தமது கொள்­கை­கள் குறித்து பேசி­ய­படி சென்­றார் திரு சுனக். அவ­ரது சமூக ஊட­கப் பக்­கங்­க­ளுக்­காக அது காணொ­ளி­யா­கப் பதி­வு­செய்­யப்­பட்­டது. இங்­கி­லாந்­தில் இருக்­கை­வார் அணி­யத் தவ­றி­னால் 500 பவுண்டு (S$819) அப­ரா­தம் விதிக்­கப்­படும். இந்­நி­லை­யில், பிர­த­மர் சுனக் இருக்­கை­வார் அணி­யா­மல் காரில் சென்­றது குறித்து தான் அறிந்­துள்­ள­தா­க­வும் அது­பற்றி விசா­ரணை நடத்தி வரு­வ­தா­க­வும் லங்­கா­ஷி­யர் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, திரு சுனக் தமது தவற்றை முழு­மை­யாக ஒப்­புக்­கொண்டு, மன்­னிப்பு கேட்­டுள்­ள­தாக பிரிட்­டிஷ்

பிர­த­மர் அலு­வ­ல­கத்தின் செய்தித்தொடர்பாளர் தெரி­வித்­தி­ருக்­கி­றர். காணொ­ளிப் பதி­விற்­கா­கச் சிறிது நேரத்­திற்கு அவர் இருக்­கை­வா­ரைக் கழற்­றி­னார் என்­றும் ஆனா­லும் அவர் தமது தவற்றை ஒப்­புக்­கொண்­டார் என்­றும் செய்தித்தொடர்பாளர் கூறி­னார்.