கச்சா எண்ணெய் ஏற்றுமதி: ஈராக்கை மிஞ்சிய மலேசியா

கச்சா எண்ணெய் ஏற்றுமதி: ஈராக்கை மிஞ்சிய மலேசியா

1 mins read
24d6c6e0-25ec-4af4-ad4f-b8216c8d6a79
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வி­லி­ருந்து முன் இல்­லாத அள­வுக்கு அதிக அள­வி­லான கச்சா எண்­ணெய்யை சீனா கடந்த மாதம் இறக்­கு­மதி செய்­தது.

சீனா­வுக்கு மலே­சியா ஏற்­று­மதி செய்த கச்சா எண்­ணெய்­யின் அளவு, கச்சா எண்­ணெய் அதி­கம் உள்ள ஈராக், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் ஆகிய நாடு­கள் ஏற்­று­மதி செய்­த­தை­விட அதி­கம்.

கடந்த டிசம்­பர் மாதத்­தில் 5.52 மில்­லி­யன் டன் கச்சா எண்­ணெய்யை மலே­சியா ஏற்­று­மதி செய்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது ஒருநாளுக்கு 1.3

மில்­லி­யன் பீப்­பாய்க்­குச் சமம்.

கச்சா எண்ணெய்யை ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்ற உகந்த இடமாக, நீண்டகாலமாக இருந்து வருகிறது மலேசியக் கடற்பகுதி. கடந்த மாதம் சவூதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து சீனாவுக்கு அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை ஏற்றமதி செய்தது மலேசியா.