கூகள் நிறுவனத்தைச் சேர்ந்த 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். ஆட்குறைப்பு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பணிபுரிபவர்கள்.
கூகள் நிறுவனத்தின் 25 ஆண்டு வரலாற்றில் ஆகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அமெரிக்க ஊழியர்களுக்கு இழப்பீடும் மற்ற சில சலுகைகளும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தொழில்நுட்ப நிறுவனங்களான மேட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் தலா 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன.

