அமெரிக்காவில் பொது பல்கலைக்கழகங்கள் சில, டிக்டாக் தளத்திற்கு தடை விதித்துள்ளன. தனிநபர் தகவல் பாதுகாப்பைக் கருதி இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன.
ஜார்ஜியா, டெக்சஸ், ஒக்லஹோமா, அலபாமா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் டிக்டாக்கிற்கு எதிராகத் தடை விதித்துள்ளன.
அரசாங்க அமைப்புகள் வழங்கியுள்ள கைத்தொலைப்பேசிகள் டிக்டாக் தளத்தை பதிவிறக்கம் செய்ய ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. தளத்தைப் பயன்படுத்துவோரின் தனிநபர் தகவல்கள் சேகரிக்கப்பட்டு சீன அரசாங்கத்திடம் பகிர்ந்துகொள்ளப்படும் என்ற அக்கறை தடைக்கு காரணம் எனக் கருதப்படுகிறது. தேசிய பாதுகாப்பைக் கருதி அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு முழுமையான தடையை விதிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துவருகிறது.
இந்நிலையில் டிக்டாக் தளத்தில் காணொளிகள் பதிவேற்றம் செய்துவரும் மாணவர்கள் தடையை எதிர்த்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

