இந்தியப் பெண் இராணுவ அதிகாரியின் அண்டார்டிகா சாதனை

இந்தியப் பெண் இராணுவ அதிகாரியின் அண்டார்டிகா சாதனை

1 mins read
4978239a-29f0-4d74-8486-82b5e2b1ce70
1,381 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 33 வயதான ஹர்பிரித் எடுத்துக்கொண்ட காலம் சுமார் இரண்டு மாதங்கள் (படம்: ஹர்பிரித் சாந்தி/டுவிட்டர்) -

பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த சீக்கிய பெண் அதிகாரி ஒருவர் அண்டார்டிகா கண்டத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். ஒற்றையாக எந்தவொரு துணையோ கருவியோ இன்றி அவர் அண்டார்டிகாவை கடந்துள்ளார்.

இந்தச் சாதனையை படைத்துள்ள முதல் இந்தியப் பெண் அதிகாரி கேப்டன் ஹர்பிரித் சாந்தி. வெப்பநிலை -50 டிகிரி செல்சியஸில் கிட்டத்தட்ட 1,397 கிலோமீட்டர் தூரத்தை அவர் கடந்துள்ளார். இதற்கு முன் படைக்கப்பட்ட சாதனையில் 2020ல் அஞ்சா பலாச்சா என்பவர் 1,381 கிலோமீட்டர் தூரத்தை கடந்தார்.

இந்த தூரத்தை கடக்க 33 வயதான ஹர்பிரித் எடுத்துக்கொண்ட காலம் சுமார் இரண்டு மாதங்கள். அவருடைய பயணம் சென்ற நவம்பர் மாதம் தொடங்கியது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகா பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டபோது அதை கடக்க ஹர்பிரித் முடிவெடுத்தார். அதற்கான பயிற்சியில் தீவிரமாக இறங்கினார்.

பல நெடுந்தொலைவு ஓட்டங்களில் பங்கெடுத்துள்ள ஹர்பிரித், நேப்பாளம், கென்யா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.