'ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு தாக்குதல் நடத்தலாம்'

'ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு தாக்குதல் நடத்தலாம்'

1 mins read
8129e751-b362-4278-a20f-19fa5d9bc07c
உக்­ரேன் படை­யி­னர் ஆயுதப் பயிற்சி பெறும் வரை ர‌ஷ்­யப் படை­க­ளுக்கு எதி­ராக பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று மூத்த அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக பைடன் நிர்­வாக அதி­காரி ஒரு­வர் சொன்­னார். படம்: பிக்ஸாபே -

உக்ரேனுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

வா‌ஷிங்­டன்: உக்­ரேன் படை­யி­னர் ஆயுதப் பயிற்சி பெறும் வரை ர‌ஷ்­யப் படை­க­ளுக்கு எதி­ராக பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று மூத்த அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக பைடன் நிர்­வாக அதி­காரி ஒரு­வர் சொன்­னார்.

பெயர் வெளி­யிட விரும்­பாத அவர், தற்போதைய நிலையில், உக்­ரே­னுக்கு ஆப்­ரேம்ஸ் டாங்­கி­களை வழங்­கு­வ­தில்லை என்ற முடி­வில் அமெ­ரிக்கா உறு­தி­யாக உள்­ளது என்­றும் சொன்­னார்.

புதிய ஆயு­தங்­கள் கிடைக்­கும்­போது அவற்றைப் பயிற்சி பெற்ற பின் உக்­ரே­னிய படை­யி­னர் பயன்­ப­டுத்­தி­னால், தாக்­கு­தல் மிக­வும் வெற்­றி­க­ர­மாக இருக்­கும் என்று அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் நம்­பு­கின்­ற­னர்.

உக்­ரே­னுக்கு மேலும் 2.5 பில்­லி­யன் மதிப்­பி­லான ஆயு­தங்­கள் வழங்­கப்­படும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் இந்த வாரம் கூறி­யி­ருந்­தார்.

பக்­முத் நக­ரத்தை ர‌ஷ்­யா­வி­டம் இழந்­து­வி­டா­மல் இருக்க உக்­ரேன் பெரு­ம­ளவு ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தா­லும், ர‌ஷ்யா உக்­ரே­னி­யர்­களை அங்­கி­ருந்து விரட்­டு­வ­தற்­கான சாத்­தி­யம் உள்­ள­தாக அமெ­ரிக்கா கரு­து­கிறது.

அப்­படி நடந்­தால், போரில் முன்­னேற்­றம் எது­வும் இருக்­காது என்­றார் அந்த அதி­காரி.

பீரங்­கித் தாக்­கு­தல் மூலம் ர‌ஷ்­யாவைச் சுற்றி வளைப்­ப­தைத் தவிர்த்து, தனது போர் அணு­கு­மு­றையை உக்­ரேன் சரி­செய்­யு­மா­றும் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் அறி­வு­றத்­தி­யுள்­ள­னர்.

இதற்­கி­டையே, ரஷ்ய கச்சா எண்­ணெய்க்­கான விலை உச்­ச­வ­ரம்பை மறு­ப­ரி­சீ­லனை செய்ய அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் ஒப்­புக்­கொண்­டுள்­ளன.

ர‌ஷ்­யா­வின் வரு­வா­யை மேலும் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்கில், தற்­போ­தைய விலை­யான

60 அமெ­ரிக்கா டால­ரை­வி­ட­வும் குறைந்த விலையை நிர்ணயம் செய்ய சில ஐரோப்­பிய நாடு­கள் அழுத்­தம் கொடுக்கின்றன.