இம்ரான்கான் கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல்

இம்ரான்கான் கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல்

1 mins read
06c42f97-d81d-417b-9194-d837a855c417
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் மேலும் 35 நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூண்டோடு பதவி விலகியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் மேலும் 35 நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூண்டோடு பதவி விலகியுள்ளனர்.

இம்ரான்கான் பதவி இழந்ததைத் தொடா்ந்து, அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப், கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த 123 உறுப்பினர்கள் சென்ற ஆண்டு பதவி விலகினர்.

இந்த நிலையில், இம்ரான் கட்சியைச் சோ்ந்த 34 உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சியான அவாமி முஸ்லிம் லீகின் ஒரு உறுப்பினர் ஆகியோரின் பதவி விலகலை அவைத் தலைவா் ராஜா பொ்வய்ஸ் அஷ்ரஃப் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது, அந்த 35 பேரின் பதவி விலகலையும் அவைத் தலைவா் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.