பெய்ஜிங்: அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சீனாவில் கொவிட்-19 மீண்டும் பெரிய அளவில் பரவுவதற்கான சாத்தியம் குறைவு என்று பிரபல அரசாங்க ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஏனெனில் அங்கு கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் ஏற்கெனவே கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகிவிட்டதாக அவர் சொன்னார்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பெருமளவில் பயணங்களை மேலும் இந்தக் காலக்கட்டத்தில் கிருமிப் பரவல் மீண்டும் பெரிய அளவில் தலைதூக்கும் என்று அச்சம் நிலவுகிறது. ஆனால், குறுகிய காலகட்டத்தில் இரண்டாவது அலைக்கு வாய்ப்பு குறைவு என்று தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ கூறினார்.
சீனாவில் கொவிட்-19 உச்சத்தைக் கடந்துவிட்டதாக தேசிய சுகாதார ஆணையம் வியாழக்கிழமையன்று சொன்னது.
கிருமித் தொற்றைத் துடைத்தொழிக்கும் கொள்கையை சீனா கைவிட்ட பிறகு, மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 60,000 பேர் மாண்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

