பாகிஸ்தானின் தேசிய மின்சார விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தடை இன்று விடியற்காலை ஏற்பட்டது. கோளாறை சரிசெய்யும் நடவடிக்கை நடந்துவருவதாகக் கூறப்பட்டது.
தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி ஆகிய பெரிய நகரங்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சார விநியோகத்தை முழுமையாக சரிசெய்ய 12 மணிநேரம் வரை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

