புதிய ஆண்டில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிபாடு செய்யும் சீனா

புதிய ஆண்டில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிபாடு செய்யும் சீனா

1 mins read
4a7b9156-5f47-4cad-b282-5d957e607e2d
சீனாவில் கொவிட்-19 அலை கடந்துவிட்டதாக அந்நாட்டின் சுகாதார நிபுகணர்கள் நம்புகின்றனர் (படம்: ராய்ட்டர்ஸ்) -

பிறந்திருக்கும் சீனப் புத்தாண்டில் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சீனர்கள் பலர் பிரார்த்தனை செய்தனர். கடந்த மூவாண்டுகளாக கொவிட்-19 கிருமித் தொற்று காரணமாக சீனர்கள் மன உளைச்சல், பண நெருக்கடி ஆகியவற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற லாமா ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். பிறந்திருக்கும் முயல் ஆண்டில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று பலர் வழிபட்டனர்.

ஜனவரி 13லிருந்து 19ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிட்டத்தட்ட 13,000 பேர் தொற்று காரணமாக மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீனாவில் இந்தாண்டு மட்டும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் தொற்று காரணமாக உயிரிழக்கக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.