முயல் ஆண்டில் முயலுக்கு வந்த சோதனை

1 mins read
49c59a8e-0698-4fe4-9de8-aaeffba75870
புலி ஆண்டிலிருந்து முயல் ஆண்டு பிறந்திருப்பதை குறிக்கும் வகையில் புலிக்குட்டி ஒன்றையும் முயல் ஒன்றையும் வைத்து புகைப்படம் எடுக்க ஏற்பாட்டாளர்கள் விரும்பினர் (படம்: இணையம்) -

சீனாவில் உள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றில் சீனப் புத்தாண்டை வரவேற்க நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முயல் ஒன்று மயிரிழையில் உயிர்தப்பியது.

புலி ஆண்டிலிருந்து முயல் ஆண்டு பிறந்திருப்பதை குறிக்கும் வகையில் புலிக்குட்டி ஒன்றையும் முயல் ஒன்றையும் வைத்து புகைப்படம் எடுக்க ஏற்பாட்டாளர்கள் விரும்பினர். அடுத்து நடந்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

முயலை முதலில் மோப்பம் பிடித்தது புலிக்குட்டி. திடீரென்று அதன் பாதத்தை நீட்டி, முயலை கடிக்க அது முற்பட்டது. நல்ல வேளையாக விலங்குகளை கையில் பிடித்திருந்த பராமரிப்பாளர்கள் இரு விலங்குகளையும் பிரித்தனர்.

நல்ல வேளையாக உயிர் தப்பினோம் என்று துள்ளிக் குதித்து ஓடியது முயல்.