நிலாவில் காலெடுத்து வைத்தவர் என்ற பெருமைக்குரியவர் பஸ் அல்டிரின் (Buzz Aldrin). முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரான இவர் தனது 93 வயதில் நான்காவது முறை திருமணம் புரிந்துள்ளார்.
தனது நீண்டநாள் காதலியான 63 வயது அன்கா என்பவரை இவர் திருமணம் செய்துள்ளார்.
அல்டிரினின் புதிய மனைவி இரசாயனப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அதோடு தனது கணவர் நடத்திவரும் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் உள்ளார்.
1969ஆம் ஆண்டு அப்போலோ 11 விண்வெளி ஆராய்ச்சியில் நிலாவுக்கு அல்டிரின் அனுப்பிவைக்கப்பட்டார். நான்கு நாள்களுக்கு பின்னர் அவர்கள் பயணம் செய்த விண்கலம் நிலாவை அடைந்தது. நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் அல்டிரின் ஆகிய இருவரும் நிலாவில் முதலில் காலெடுத்து வைத்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தனர்.

