உக்ரேன் போரில் 180,000 ரஷ்யர் பலி, காயம் என தகவல்

2 mins read
3120fd3b-a2fe-48a7-90d5-4ff7c8143b4a
-

ஓஸ்லோ: உக்­ரே­னு­ட­னான போரில் ரஷ்­யத் துருப்­பி­னர் 180,000 பேர் கொல்­லப்­பட்­ட­னர் அல்­லது காய­முற்­ற­னர் என்று நார்வே நாட்­டைச் சேர்ந்த ராணு­வத் தலை­வர் கணித்­துள்­ளார். உக்­ரேன் தரப்­பில் 100,000 ராணுவ வீர்­கள் உயி­ரி­ழந்தோ காய­முற்றோ இருக்­கக்­கூ­டும் என்­றும் அவர் 'டிவி12' தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்து உள்­ளார்.

"இந்த மோச­மான போரில் உக்­ரே­னிய பொது­மக்­களில் கிட்­டத்­தட்ட 30,000 பேர் உயி­ரி­ழந்­தி­ருப்­பார்­கள். 100,000க்கும் மேற்­பட்ட ராணுவ வீரர்­கள் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் பொது­மக்­களும் பாதிக்­கப்­பட்­ட­தால் உக்­ரேன் தரப்­பில் சேதம் அதி­கம்," என்றார் நார்வே தற்­காப்­புப் படைத் தலை­வரான எரிக் கிறிஸ்­டோ­ஃபர்­சன்.

"அதேநேரம் கடு­மை­யான இழப்பு ஏற்­பட்­ட­போ­தி­லும் ரஷ்யா நீண்­ட­கா­ல­மாக போரைத் தொடர்ந்து வரு­கிறது," என்று மாஸ்­கோ­வின் ராணுவ நட­மாட்­டம் மற்­றும் ஆயுத உற்­பத்­தித் திறன்­கனை மேற்­கோள் காட்டி நேற்று முன்­தி­னம் திரு கிறிஸ்­டஃபர்­சன் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும் இந்த உயிர்ச்­

சே­தம் அல்­லது காயம் எந்த அடிப்ப­டை­யில் கணக்­கி­டப்­பட்­டது என்ற விவ­ரத்தை அவர் வெளி­யி­ட­வில்லை.

கிட்­டத்­தட்ட 11 மாதங்­க­ளாக நடை­பெற்று வரும் ரஷ்ய-உக்­ரேன் போரில் இது­வரை எத்­தனை பேர் உயி­ரி­ழந்­த­னர், எத்­தனை பேர் காய­ம­டைந்­த­னர் என்ற விவ­ரங்­களை இரு நாடு­களும் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யி­டாத நிலை­யில் இவர் இந்­தக் கணிப்­பைத் தெரி­வித்­துள்­ளார்.

போர் விமா­னங்­களை முறி­ய­டிக்­கக்­கூ­டிய சிறந்­த தற்­காப்­புத் திறனை உக்­ரேன் பெற்­றி­ருப்­ப­தா­கக் கூறிய அவர், ரஷ்­யா­வின் ஆகா­யப் படைத் தாக்­கு­தலை உக்­ரேன் தொடர்ந்து முறி­ய­டிக்­குமா என்­பது கவ­லைக்­கு­ரிய கேள்வி என்­றார்.

கார­ணம், அண்­மைய மாதங்­க­ளாக ரஷ்­யப் படை நடத்தி வரும் தாக்­கு­தல் நீண்­ட­தூ­ரம் பாயக்

­கூ­டிய ஏவு­க­ணை­க­ளின் உத­வி­யோடு மேற்­கொள்­ளப்­படுபவை என்­றும் திரு கிறிஸ்­ட­ஃபர்­சன் தெரி­வித்­தார். உக்­ரே­னுக்கு எதிர்ப்­புப் பீரங்­கி­கள் அதி­கம் தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அதனை உக்­ரேன் ஆத­ரவு நாடு­கள் விரை­வாக வழங்கி உதவுவது அவ­சி­யம் என்­றும் அவர் கூறி­னார்.

முன்­ன­தாக, கடந்த நவம்­பர் மாதம் அமெ­ரிக்க ராணு­வத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான மார்க் மைலி, ரஷ்­யத் தரப்­பில் 100,000க்கும் மேற்­பட்ட ராணு­வத்­தி­னர் மாண்­டு­விட்­டார்­கள் அல்­லது காய­ம­டைந்­தார்­கள் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

உக்­ரே­னி­யத் தரப்­பி­லும் கிட்­டத்­தட்ட இதே­மா­தி­ரி­யான பாதிப்பு நிகழ்ந்­தி­ருக்­கும் என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால், இந்த எண்­ணிக்கை எந்த அடிப்­ப­டை­யி­லா­னது என்ற விவ­ரம் அப் போதும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையே, ரஷ்­யா­வைத் தோற்­க­டிப்­ப­தில் உதவ ஜெர்­ம­னி­யில் தயா­ரிக்­கப்­பட்ட அதி­ந­வீன கவச வாகனங்கள் தனக்­குத் தேவை என்று மேற்­கத்­திய நாடு­க­ளி­டம் உக்­ரேன் வலி­யு­றுத்­தி­யது. அதற்கு போலந்து உட­ன­டி­யாக செவி­சாய்த்­துள்­ளது.

தான் ஏற்­று­மதி செய்த கவச வாகனங்களை உக்­ரே­னுக்கு போலந்து வழங்­கி­னால் அதன் குறுக்கே நிற்­கப்­போ­வ­தில்லை என ஜெர்­மனி நேற்று கூறி­யது.