விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

3 mins read
d70752a8-3e71-4baa-8618-d46ffdf4928f
-

ஹாலண்டின் 4வது ஹாட்ரிக்: புகழ்பாடும் கார்டியோலா

மான்செஸ்டர்: பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில்

மான்செஸ்டர் சிட்டி குழு ஊல்வ்ஸ் குழுவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதில் சிறப்பு அம்சம் என்ன வெனில், அந்த மூன்று கோல்களையுமே மான்செஸ்டர் சிட்டியின் கோல் மன்னன் எர்லிங் ஹாலண்ட் (படம்) போட்டார். இது அவருக்கு 4வது ஹாட்ரிக் சாதனை. இந்த 22 வயது காற்பந்து வீரர் இதுவரை விளையாடிய 19 பிரி

மியர் லீக் ஆட்டங்களில் 25 கோல்கள் போட்டுள்ளார். பிரிமியர் லீக் தவிர்த்த மற்ற ஆட்டங்களையும் சேர்த்தால் இந்தக் காற்பந்து பருவத்தில் இவர் போட்ட கோல்கள் 31. அவருடைய கோல் எண்ணிக்கையைப் பார்த்தால் நம்பமுடியவில்லை என்று வியப்புடன் கூறும் மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, "அவர் 24 மணிநேர மும் காற்பந்தாட்டத்தின் மீதுள்ள பேரார்வத்துடனேயே வாழ்கிறார்," என்று புகழாரம் சூட்டியுள்ளளார்.

அர்டெட்டா: இதைவிட சிறப்பான முடிவு இருக்க முடியாது

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளர் விருதை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்சனல் குழு வென்றது. ஆனால், இந்தக் காற்பந்துப் பருவத்தில் எப்பாடுபட்டாவது அதை வென்றுவிட வேண்டும் என்ற வேகம் அந்த அணியிடம் தெரிகிறது. நேற்று முன்தினம் பின்னிரவு மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதிய ஆர்சனல், ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்துவிடுமோ என்று நினைக்கையில், ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் எடி இங்கெட்டியா என்ற வீரர் மூலம் மேலும் ஒரு கோல் போட்டு யுனைடெட்டை 3-2 என இறுதியில் வெற்றி கண்டது.

இது பற்றி கூறிய ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்டெட்டா, "உணர்ச்சிப் பெருக்கெடுப்பு, மிகுதியான ஆர்வம், பஞ்சமில்லாத தரம் என எல்லாம் இந்த ஆட்டத்தில் இருந்தது, இதைவிட சிறப்பான ஆட்டத்தைக் காண முடியாது," என்று உற்சாகத்தில் புரண்டார். அண்மைய ஆண்டுகளில் நெருக்கடி மிகுந்த போட்டி களில் ஆர்சனல் குழு தோற்றுள்ளது. அதனால், தர வரிசைப் பட்டியலில் இந்த ஆண்டு முதலிடம் வகிக்கும் இந்தக் குழுவால் பிரிமியர் லீக் விருதை தட்டிச் செல்ல முடியுமா எனப் பலர் எண்ணியதுண்டு. ஆனால் நேற்று முன்தினம் அதன் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் அதற்கான வேளை வந்துவிட்டதாகவே கூறுகின்றனர்.

நியூசிலாந்திடம் அதிர்ச்சித் தோல்வி; வெளியேறியது இந்திய அணி

புவனேஸ்வர்: நியூசிலாந்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந் தன் மூலம் இந்திய அணி உலகக் கிண்ண ஹாக்கியி லிருந்து வெளியேறியது. உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா, ஞாயிறன்று நடந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட் மூலம் 5-4 என்ற கோல் கணக் கில் நியூசிலாந்திடம் வெற்றியைப் பறிகொடுத்தது. அதனால் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அந்த அணி இழந்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முற்பகுதியில் 2-0 என்றும் பிற்பகுதியில் 3-1 என்றும் இந்தியா முன்னணியில் இருந்தது. பின்னர் நியூசிலாந்து மேலும் 2 கோல்கள் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது. இதனைத் தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிப்பதற்காக பெனால்டி வழங்கப்பட்டது. இதில் நியூசிலாந்து 5-4 என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

சிரமங்களை ஒதுக்கி முனைப்புடன் விளையாடிய யுவென்டஸ்

டூரின் (இத்தாலி): யுவென்டஸ் குழு வீரர்களை வாங்கி விற்பதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதற்கு இத்தாலிய காற்பந்து சம்மேளனம் 15 புள்ளிகளைக் கழித் தது. எனினும், மாக்சிமிலானோ அலெகிரியை நிர்வாகி யாகக் கொண்டுள்ள யுவென்டஸ் நேற்று முன்தினம் அட்டலாண்டா குழுவுடன் மோதிய ஆட்டத்தில் 3-3 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டது. ஆட்ட முடிவில் இத்தாலிய 'சிரியா ஆ' லீக் பட்டியலில் யுவென்டஸ் குழு 23 புள்ளிகளுடன் ஒன்பதாவது நிலை யில் உள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட அட்டலாண்டா குழு 35 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

"நாம் காற்பந்துத் திடலில் செய்யவேண்டிய பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். இந்த மாலைப்பொழுதில் இவ்வளவு முனைப்புடன் விளையாடிய வீரர்களைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், இரண்டாம், மூன்றாம் நிலையில் இருக்க வேண்டிய நாம் 10ஆம் நிலைக்கு போகவேண்டிய சூழல் ஏற்படுவது உணர்ச்சி களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. நாம் சாதித்ததை எல்லாம் நம்மிடமிருந்து பிடுங்கிக்கொண்டது போன்ற உணர்வைத் தருகிறது," என்றார் யுவென்டஸ் நிர்வாகி அலெகிரி.

மேலும் அவர், "இந்த நிலைமையை சரிசெய்ய பாடுபட்ட வீரர்கள், ஊழியர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்," என்றார் பெருமையுடன்.