பிரிட்டிஷ் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் ஆகப்பெரிய ஆர்ப்பாட்டம்

பிரிட்டிஷ் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் ஆகப்பெரிய ஆர்ப்பாட்டம்

1 mins read
cb8324e3-6825-44a1-8ee2-a9c80f37fd86
-

லண்­டன்: பணவீக்க அதிகரிப்புக்கு நிகரான சம்பள உயர்வு கேட்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடத்தி வரும் வேலை­நி­றுத்­தத்­தில் நேற்று மேலும் பல தொழிற்­சங்­கங்­கள் இணைந்­த­தால் அது மிகப்­பெ­ரிய போராட்­ட­மாக உரு­வெ­டுத்துள்­ளது.

யூனி­சன், யுனைட் மற்­றும் ஜிஎம்பி தொழிற்­சங்­கங்­க­ளைச் சேர்ந்த ஆம்­பு­லன்ஸ் ஊழி­யர்­கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக முதல்­மு­றை­யாக கைகோர்த்துள்­ளனர்.

போரா­டும் அதே­நே­ரம் பொது­மக்­கள் பாதிக்­கப்­ப­டாது இருக்க அவ­ச­ரத் தேவை­க­ளுக்கு 999 என்ற எண்ணை மட்­டுமே அழைக்கு­மாறு தொழிற்­சங்­கங்­கள் கேட்­டுக்­கொண்டு உள்­ளன.

15,000 யூனி­சன் ஆம்­புலன்ஸ் ஊழி­யர்­க­ளு­டன் லிவர்­பூ­லில் உள்ள தேசிய சுகா­தா­ரச் சேவை­யைச் சேர்ந்த 5,000 ஆம்­பு­லன்ஸ் ஊழி­யர்­களும் போராட்­டத்­தில் இணைந்­து­கொள்­வார்­கள் என்று போராட்­டத்தை வழி­ந­டத்­தும் யூனி­சன் தெரி­வித்துள்ளது.

போராட்­டத்தை முடி­வுக்­குக் கொண்­டு­வர வேண்­டு­மா­யின் தேசிய சுகா­தா­ரச் சேவை ஊழி­யர்­க­ளுக்கு ஈரி­லக்க விழுக்­காட்டு சம்­பள உயர்வை வழங்க வேண்­டும் என்று யுனைட் தொழிற்­சங்­கத்தின் பொதுச் செய­லா­ளர் ஷரோன் கிர­ஹாம் 'ஸ்கை நியூஸ்' செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

"அனு­பவ ஊழி­யர்­க­ளுக்கு அவர்­க­ளின் திற­னுக்­கேற்ற அதிக சம்­ப­ளம் வழங்­கப்­பட்­டால் அவர்­கள் வெளி­யே­றிச் செல்­லா­மல் தடுக்க முடி­யும்.

"மேலும், தேசிய சுகா­தா­ரச் சேவை­யில் இணைந்து பணி யாற்ற அதிகமானோரை ஈர்க்க சம்பள உயர்வு உதவும்," என்­றார் அவர்.