மின்சாரமின்றி பல்லாயிரம் பாகிஸ்தானியர் தவிப்பு

மின்சாரமின்றி பல்லாயிரம் பாகிஸ்தானியர் தவிப்பு

1 mins read
2c710c32-de59-4b8b-bd80-fc53d328b400
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னில் நேற்று ஏற்­பட்ட மின்­த­டை­யால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக அந்­நாட்­டின் மின்­துறை தெரி­வித்­தது. இது கடந்த மூன்று மாதங்­களில் அங்கு நிகழ்ந்­தி­ருக்­கும் இரண்­டா­வது பெரிய மின்­தடை.

தென்­ப­குதி சிந்து மாநிலத்­தில் மின்­னோட்­டம் ஏற்ற இறக்­க­மாக இருந்­த­தா­க­வும் அத­னால் தொழிற்­சா­லை­கள், மருத்­து­வ­ம­னை­கள் மற்­றும் பள்­ளிக்­

கூ­டங்­கள் அவ­தி­யுற்­ற­தா­க­வும் மின்துறை அமைச்­சர் குரும் தஸ்­த­கிர் கூறி­னார்.

தலை­ந­கர் இஸ்­லா­மா­பாத் தொடங்கி, தென்­ப­கு­தித் துறை­மு­க நகர் கராச்சி, கிழக்­குப் பகுதி லாகூர், வடக்­குப் பகுதி பெஷா­வர் என நாட்­டைச் சுற்­றி­லும் மின்­தடை பல­மணி நேரத்­திற்கு நீடித்­தது. குறிப்­பாக, பெஷா­வர் நக­ரில் உள்ள குடி­நீர் குழாய்­கள் மின்­சா­ரத்­தில் இயங்­கு­வ­தால் நேற்று அந்­ந­கர் மக்­கள் குடிக்­கத் தண்­ணீர் இன்றி சிர­மப்­பட்­ட­னர்.

பாகிஸ்­தா­னின் மின்­சார உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த ஏரா­ள­மான நிதி தேவைப்­ப­டு­கிறது. மேம்­பாடு இல்­லா­த­தால் அங்கு அடிக்­கடி மின்­தடை ஏற்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதற்கு முன்­னர் அக்­டோ­பர் மாதம் ஏற்­பட்ட மின்­தடை வழக்­க­நி­லைக்­குத் திரும்ப பல­மணி நேரம் ஆனது.