பேங்காக்: மத்திய தாய்லாந்தில் சீனப் புத்தாண்டு விடுமுறை தினத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக காவல்
துறையினர் நேற்று கூறினர்.
தாய்லாந்தில் சாலை விபத்து கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. சாலைப் பாதுகாப்பு அங்கு மோசமாக இருக்கும். குறிப்பாக, விடுமுறை தினங்களில் வாகன நடமாட்டம் மிகுந்திருக்கும்போது அதிக விபத்துகள் நடக்கின்றன.
அந்த வகையில், வடகிழக்கு அம்னாட் சரோயன் மாநிலத்தில் இருந்து நாட்டின் தலைநகர் பேங்காக் நோக்கி 12 பேருடன் சென்று கொண்டு இருந்த வேன் ஒன்று சனிக்கிழமை இரவு விபத்தில் சிக்கியது.
விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த வேன், ஓட்டு
நரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி ஓடியது. தலைகுப்புறக் கவிழ்ந்ததும் வேன் தீப்பற்றி எரிந்தது.
20 வயது மாணவர் மட்டும் வேனின் சன்னல் பகுதி வழியாக தப்பி வெளியேறினார். மற்ற 11 பேரும் தீயில் கருகி மாண்டதாக காவல்துறை அதிகாரி யிங்யோஸ் போல்டெஜ் தெரிவித்தார்.
வேனில் தாம் தூங்கிக்கொண்டு இருந்தபோது அலறல் சத்தம் கேட்டு எழுந்ததாகவும் உடனடியாக சன்னலை உதைத்தாகவும் உயிர்தப்பிய இளையர் கூறினார்.
சன்னலை உடைத்து தாம் வெளியேறிய சில வினாடிகளில், ஏற்கெனவே தீயில் எரிந்து கொண்டிருந்த வேன் வெடித்துச் சிதறியதாகவும் அவர் தெரிவித் தார்.


