தென்மியன்மாரில் ராணுவம்-போராளிகள் கடும் மோதல்

யங்­கூன்: மியன்­மா­ரின் தெற்­குப் பகு­தி­யில் அந்­நாட்­டின் ராணு­வத்­துக்­கும் போராளி அமைப்­பு­க­ளுக்­கும் இடையே கடு­மை­யான சண்டை நிலவி வரு­கிறது.

வன்­மு­றைக்­குப் பயந்து அப்­

ப­கு­தி­க­ளைச் சேர்ந்த ஆயி­ரக்­

க­ணக்­கான மக்­கள் தப்பி ஓடி­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்டுக­ளுக்கு முன்பு மியன்­மார் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை அந்­நாட்டு ராணு­வம் கவிழ்த்ததில் அங்கு வன்­முறை தாண்­ட­வம் ஆடு­கிறது.

மக்­கள் தற்­காப்­புப் படை­கள் போன்ற நீண்­ட­கா­ல­மா­கப் போராடி வரும் போராளி அமைப்பு ­கள் ராணு­வத்­து­டன் அடிக்­கடி மோது­கின்றன.

அண்­மைய சில நாள்­க­ளாக மியன்­மா­ரின் தென்­கி­ழக்­குப் பகுதியில் இருக்­கும் கெரன்

மாநி­லத்­தி­லும் எல்லை நக­ர­மான பய­தோன்­சு­வி­லும் கியோன்­னெடோ நக­ரி­லும் சண்டை

தீவி­ரம் அடைந்­துள்­ளது.

கியோன்­னெடோ நக­ரில் உள்ள ராணு­வத் தளம் மீது மக்­கள் தற்­காப்­புப் படை­கள் ஆளில்லா வானூர்­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக மியன்­மார் ராணு­வத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் தெரி­வித்­தார்.

போரா­ளி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கும் வகை­யில் ராணு­வம் ஆங்­காங்கே பீரங்­கி­க­ளால் சுட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

இது­தொ­டர்­பாக அவர் கூடு­தல் விவ­ரங்­களை வெளி­யி­ட­வில்லை.

கியோன்­னெடோ நக­ரம் 5,000 மக்­கள்­தொ­கை­யைக் கொண்­டது. ராணு­வ­மும் போரா­ளி­களும் மாறி மாறி தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தால் அவர்­கள் பீதி அடைந்­துள்­ள­னர்.

“இரவு முழு­வ­தும் துப்­பாக்கி சுடும் சத்­தம் கேட்­கிறது. வீட்­டில் இருக்­க­வும் பய­மாக இருக்­கிறது. அந்­தப் பயங்­க­ரத்­தைச் சொற்­

க­ளால் வர்­ணிக்க இய­லாது,” என்று பெயர் சொல்ல விரும்­பாத நக­ர­வாசி ஒரு­வர் செய்­தி­யா­ளர்­

க­ளி­டம் தெரி­வித்­தார்.

தாய்லாந்துடனான எல்லைக்கு அருகில் இருக்கும் பயதோன்சு நகரில் உள்ள பல அரசாங்கக் கட்டடங்களுக்கு கெரன் போராளி அமைப்பு தீ மூட்டியதாகக் கூறப்படுகிறது.

அவற்றில் குடிநுழைவு, ராணுவ உளவியல் பிரிவு ஆகியவற்றின் கட்டடங்களும் அடங்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!