பெய்ஜிங்: வடமேற்கு ஆசியாவில் முன் இல்லாத அளவில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது.
சீனாவிலும் ஜப்பானிலும் கடுங்குளிரால் மக்கள் அவதி
யுறுகின்றனர்.
அதிலும், ஜப்பானில் பனிப்
புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சீனாவின் வடக்குப் பகுதி யில் உள்ள சில இடங்களில் வெப்பநிலை -53 டிகிரி செல்சியசாகப் பதிவாகி உள்ளது.
இந்த நிலை இவ்வாரம் முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜப்பானின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று ஜப்பான் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
வழக்கத்துக்கு மாறான கடுங்குளிர், இம்மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூடேற்றும் சாதனங்களுக்கான தேவை பெருமளவில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள், கட்டடங்கள் ஆகியவற்றின் உட்புறங்களில் உள்ள வெப்பநிலையை அதிகரிக்கவும் வெந்நீர் வழங்கவும் சீனாவில் கடுங்குளிரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் ஆலைகள், பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இதனால் நிலக்கரி பயன்பாடு மூன்றில் ஒரு பங்கு அதி
கரித்திருப்பதாக சீன ஊடகம் தெரிவித்தது.
இந்நிலையில், மின்தடை, எரிபொருள் பற்றாக்குறை பற்றி எவ்வித தகவலும் இல்லை,
ஜப்பான் தலைநகர் தோக்கியோ, நகோயா, ஃபுகுவோகா ஆகியவற்றில் வெப்பநிலை இன்று 0 டிகிரி செல்சியசுக்குக் கீழ் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்லும்படி ஜப்பானிய நில, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுப்பயண அமைச்சு நேற்று ஜப்பானியர்களைக்
கேட்டுக்கொண்டுள்ளது.

