இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எங்கும் நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், ஒருநாள் கழித்து பாகிஸ்தானின் பெரும்பாலான நகரங்களில் மின்சார சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.
பாகிஸ்தானில் பொருளியல் நெருக்கடிநிலை நிலவுவதால் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மின்சார சேவை படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்புவதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் குரம் தாஸ்ட்கிர் கான் தெரிவித்தார்.

