காட்மாண்டு: நேப்பாளத்தில் ரிக்டர் அளவில் 5.6 நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆணையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் இந்தியத் தலைநகரம் புதுடெல்லி வரை உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் 25 கிலோமீட்டர் ஆழத்தில், நேப்பாளத்தின் ஜும்லா மாவட்டத்தின் வடமேற்கிலிருந்து 63 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எவ்வித தகவல்களையும் நேப்பாள அதிகாரிகள் வெளியிடவில்லை.
மிக மோசமான அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் மக்கள் பீதியடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

